சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்தித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வகையில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க புதுடில்லி செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் மோடியை நேரடியாக சந்தித்து பேச்சுக்களை நடத்துவது தொடர்பில், ஜப்பானில் வைத்து இந்திய பிரமரிருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ரணில் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக கலந்துரையாடல்களுக்காக புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தாம் மோடியிடம் தெரிவித்ததாக ரணில் தெரிவித்தார். அதிபர் என்ற முறையில் தனது முதல் புதுடில்லி விஜயம் எப்போது என்ற விடயத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.
மோடி அரசாங்கத்தின் ஆதரவு சிறிலங்காவிற்கு எப்போதும் உண்டு எனவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதில் இந்தியா ஆர்வம் காட்டி வருவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது, இலங்கை மெதுவாக ஸ்திரத்தன்மையை அடைந்து வருவதாகக் குறிப்பிட்ட ரணில், அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுக்கு நாட்டில் பெரும்பான்மையானோர் ஆதரவளிப்பதாகவும் அதற்கு எதிராக சிலர் இருப்பதாகவும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.