deepamnews
இந்தியா

இது இந்திய நாடா? ஹிந்தியின் நாடா?’ என சீமான் கேள்வி

 ‘இது இந்திய நாடா? ஹிந்தியின் நாடா?’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய உயர்கல்வி நிலையங்களிலும், கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசின் பள்ளிகளிலும் ஹிந்தியை கட்டாயப் பயிற்று மொழியாக்க வேண்டும் எனவும், மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் ஹிந்தியில்தான் நடத்தப்பட வேண்டும் என கொடுக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே வேட்டு வைக்கும் பேராபத்து.

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டும்தான் இந்நாட்டுக்கு வரி செலுத்துகிறார்களா?

 அவர்கள் மட்டும்தான் விடுதலைக்கு பங்களிப்பு செலுத்தினார்களா? ஹிந்திக்காரர்கள் மட்டும்தான் நாட்டின் குடிமக்களா? எதற்கு ஹிந்திக்கு மட்டும் இத்தகைய முக்கியத்துவம்?

ஒற்றை மொழியை முன்னிறுத்தி, அதனை திணிக்க முற்படும் மத்திய அரசின் செயல் மிகப்பெரும் ஜனநாயகப் படுகொலை.

ஹிந்தி எனும் ஒரே மொழியை இந்தியா முழுக்க நிறுவ முற்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கைது செய்யப்பட்ட 24 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் கடிதம்

videodeepam

இந்திய பிரதமர் மோடியின் வீட்டின் மேல் ஆளில்லா விமானம் பறந்தததால் பரபரப்பு.

videodeepam

இலங்கைக்கு வெடிபொருட்களை கடத்த முயன்ற இருவர் குற்றவாளிகளாக அறிவிப்பு

videodeepam