deepamnews
இலங்கை

யாழில் வீதியில் சென்றபோது தீப்பிடித்த வாகனம்

யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது.

மாவிட்டபுரம் பகுதியில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (21) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனம் திடீரென தீ பிடித்த நிலையில் அதனை அணைக்க பலரும் போராடிய நிலையில், காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து தீயணைப்பு வாகனம் அழைக்கப்பட்டும் தீயினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வாகனம் முற்றாக எரிந்துள்ளது.

வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே வாகனம் தீ பிடித்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து- பாதிக்கப்பட்ட கடற்றொழில்சார் கைத்தொழிலாளர்களுக்கும் நட்டஈடு

videodeepam

சுழிபுரம் – பாண்டவட்டையில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு!

videodeepam

சித்திரைப் புத்தாண்டில் நுகர்வோர் அதிகார சபை விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam