deepamnews
இலங்கை

தனிநபர் வருமான வரி தொடர்பில் வெளியான அறிவிப்பு

தனிநபர் வருமான வரி நவம்பர் 1ம் திகதி தொடக்கம் நடாளுமன்ற நிதிக்குழு மற்றும் சபாநாயகரின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ருவன்வெல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

தனிநபர் வருமானம் தொடர்பில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, மொத்த மாத வருமானம் 100,000 ரூபா அல்லது அதற்கு மேல் வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

அந்த வகையில் உயர்ந்த தனிநபர் வருமான வரி விகிதம் 36வீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மேலும் குறைப்பு – வெளியான புதிய அறிவிப்பு!

videodeepam

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 1.6 மில். டொலர் நிதியுதவி வழங்கியது ஜப்பான்

videodeepam

இலங்கையை வந்தடைந்தார் இந்திய விமானப்படை தளபதி – பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க தீர்மானம்

videodeepam