deepamnews
இந்தியா

தயார் நிலையில் 5093 நிவாரண முகாம்கள் – தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை தகவல்

வட கிழக்கு பருவமழையால் தமிழகத்தில் 35 கால்நடை இறந்துள்ளதாகவும், 77 குடிசைகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தமிழக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மழை பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 4.18 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 21.34 மி.மீ. பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தம் 26 மனித உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 7.11.2022 அன்று திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நவம்பர் 7-ம் தேதி பெய்த கனமழையின் காரணமாக 5 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 77 குடிசைகள் சேதமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 72 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியதால் 5-ம் தேதி வரை 2,83,961 உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 816 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஒடிசா தொடருந்து விபத்துக்கான காரணம் வெளியானது!

videodeepam

தமிழ்மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மதுரை மேல் நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு உத்தரவு

videodeepam

மரண தண்டனை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராயுமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவு

videodeepam