deepamnews
இலங்கை

நத்தார், புதுவருட பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

நத்தார் மற்றும் புதுவருட பண்டிகையை முன்னிட்டு அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், மற்றும் சிறப்பு அங்காடி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் குறித்த விடயம் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இயன்றளவு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதற்கு முயற்சிப்பதாக அந்த தரப்பினர் பதிலளித்துள்ளதோடு, விலை அதிகரிப்பினை மேற்கொள்ளாது இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர் எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

உலர்ந்த மிளகாய் ஒரு கிலோகிராம் 300 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. ஒரு கிலோகிராம் பருப்பு 165 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. கோதுமை மா ஒரு கிலோகிராம் 150 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 100 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. வெள்ளைச் சீனி ஒரு கிலோகிராம் 90 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. பச்சை அரிசி ஒரு கிலோகிராம் 40 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. சம்பா அரிசி மற்றும் நாடு அரிசி ஒரு கிலோகிராம் 20 ரூபாவினால் குறைடைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய விக்கிரகங்கள் உடைப்பு – யாழில் வெடித்தது போராட்டம்

videodeepam

பாம்பு கடிக்கு இலக்காகி ஒன்றரை வயது சிறுவன் பலி!

videodeepam

சண்டிலிப்பாயில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது!

videodeepam