deepamnews
இலங்கை

யாழில் குழந்தைக்கு கொடும் சித்திரவதை – வெளியான காணொளி

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கரம்பன் பகுதியில் குழந்தை ஒன்றின் மீது கொடூரமான தாக்குதல் நடத்தும் காணொளி கடந்த நாட்களில் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.

இவ்வாற பின்னணியில் தாக்குதலுக்குள்ளான குழந்தை இன்று காலை யாழ். பண்ணை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில், சிறுவர் நன்னடத்தைப் பிரிவு உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு யாழ். மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், “ஊர்காவற்றுறை – கரம்பொன் மேற்கைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிறோஜினி என்ற வாய்பேச முடியாத இளம்பெண் சுருவிலைச் சேர்ந்த நந்தகுமார் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து அதன் மூலம் பிறந்த குழந்தையே இவர். (வயது 04)

கணவனை பிரிந்து இருந்த நிறோஜினி ஒரு மாதத்திற்கு முன்னரே கணவனால் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த பெண் தற்போது மரணமடைந்திருப்பதாகவும், அவரது குழந்தை கொடும் சித்திரவதைக்கு உள்ளாவதாகவும் படங்களும் காணொளிகளும் வெளியாகின.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்த நிலையில் அது ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்களில் எட்டியது.

Related posts

கல்கிசையில் தொடர்மாடிக் குடியிருப்பின் மாடியில் இருந்து வீழ்ந்து யுவதி உயிரிழப்பு.

videodeepam

பண்னை நாகாபூசணிக்கு எதிராக முறைப்பாடு வழங்கியவர் விரைவில் வெளியேறுவார் – விக்னேஸ்வரன் சூட்சமம்

videodeepam

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் நுவரெலியாவில் விபத்து – 7 பேர் பலி, 57 பேர் காயம்

videodeepam