deepamnews
இலங்கை

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு –  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, தற்போது 415 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் டீசல் நேற்று  நள்ளிரவு முதல் 430 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், தற்போது 340 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் நேற்று நள்ளிரவு முதல் 365 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

Related posts

கடனாக பெற்ற ஒரு கோடி ரூபாவினை வழங்க மறுத்த பெண் – முதியவர் உயிர்மாய்ப்பு.

videodeepam

தையிட்டி விகாரைக்கு தனியார் காணிகளை சுவீகரிபப்பதற்கு எதிராக போராட்டம்!

videodeepam

வாள், கோடரியுடன் இளைஞன் கைது.

videodeepam