deepamnews
இலங்கை

தேர்தலை ஒத்திவைக்க முயலவில்லை என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

தாம் தேர்தலை ஒத்திவைக்க முயலவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று  உரையாற்றிய அவர், தேர்தலை ஒத்திவைக்க தமக்கு அதிகாரம் இல்லையென்று குறிப்பிட்டார்.

எனினும், தற்போதைய தேவை பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் பணியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல் விடயங்களுக்குள் அராஜகம் மற்றும் வன்முறை என்பன உள்ளடங்குவதில்லை.

எனவே அவற்றுக்கு இடம் தரமுடியாது எனவும் ரணில் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாதுகாப்பு செலவீனங்கள் அதிகரித்துள்ளமை குறித்து கருத்துரைத்த அவர், படையினருக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த செலவீனங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதேவேளை, பாதுகாப்பு விடயங்களில் புதிய உத்திகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் எரிவாயு விலை குறைப்பு

videodeepam

இந்தியா முன்வைத்த நிபந்தனைகளுக்கு உடன்பட சீனா மறுப்பு – ஜனாதிபதி

videodeepam

சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, வடமாகாண வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாகனப் பேரணி ஊர்வலம் .

videodeepam