deepamnews
இலங்கை

போராட்டங்களை அடக்க இந்திய படையினரையே பயன்படுத்த வேண்டும் என்கிறார் இரா சாணக்கியன்

இலங்கையில் படையினரை பயன்படுத்தி போராட்டங்களை அடக்கப்போவதாக ரணில் விக்ரமசிங்க கூறினால், இந்திய படையினரை பயன்படுத்தியே அதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்நேற்று உரையாற்றிய அவர், நாட்டில் பொருளாதார பிரச்சினையினால், பொதுமக்கள் மாத்திரமன்றி படையினரும், படையினரின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க, படையினரை பயன்படுத்தி போராட்டங்களை நசுக்க முடியாது. அவர்கள் அதற்கு உடன்படமாட்டார்கள். சில வேளைகளில் அவர்களே போராட்டங்களை ஆரம்பிக்கக்கூடும்.

எனவே ரணில் விக்ரமசிங்க, இந்திய படையினரை பயன்படுத்தியே போராட்டங்களை அடக்க முடியும் என சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

Related posts

தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு !

videodeepam

தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள 6 இலட்சம் பேர்: சம்பிக்க வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

videodeepam

QR முறை தொடர்பில் அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

videodeepam