deepamnews
இலங்கை

மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை -தாயின் சகோதரர் கைது

கிராண்ட்பாஸ், சமகிபுர வீடமைப்புத் தொகுதியின் 3 ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 1 1/2 வயதுடைய குழந்தையின் மரணம் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த குழந்தை உறங்கிக் கொண்டிருந்த நிலையில், மாமா ஜன்னல் வழியாக குழந்தையை வீசியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் குழந்தையின் தாயின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அதிகரிக்கும் டெங்கு அபாயம்: ஒரே நாளில் 400 விற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவு

videodeepam

கோதுமை மாவின் விலை வீழ்ச்சி

videodeepam

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

videodeepam