deepamnews
சர்வதேசம்

 ஈரானின் ஒழுக்கநெறி பொலிஸ் படை கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சட்ட மா அதிபர் அறிவிப்பு 

ஈரானின் ஒழுக்கநெறி பொலிஸ் படை கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஒழுக்க நெறி பொலிஸ் படை 2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய விதிமுறைகளுக்கு அமைவாக ஆடை அணியாதோரை இப்படையினர் கைது செய்து வந்தனர்.

|ஒழுக்க நெறி பொலிஸுக்கு நீதித்துறையுடன் சம்பந்தமில்லை. அப்படை கலைக்கப்பட்டுள்ளது என ஈரானிய சட்ட மா அதிபர் மொஹம்மத் ஜாபவர் மொன்டாஸேரி இன்று தெரிவித்தார் என ஈரானின் ஐ.எஸ்.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

நடத்தை முறைகளை ஈரானிய நீதித்துறை தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் அவர்கூறியுள்ளார்.

தலையை மறைக்கும் ஹிஜாப் ஆடை அணியாததால் ஈரானிய ஒழக்க நெறி பொலிஸ் படையினரால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி எனும் 22 வயது யுவதி பொலிஸ் காவலில் வைத்து செப்டெம்பர் 16 ஆம் திகதி உயிரிழந்தார். 

அதையடுத்து ஈரானில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வந்தன. இதன்போது பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் மோதல்களும் ஏற்பட்டிருந்தன. 

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பபமானதையடுத்து 300 இற்கும் அதிகமானோர் உயிரிந்துள்ளனர் என அந்நாட்டு இராணுவ ஜெனரல் ஒருவர் கடந்த வாரம் கூறியிருந்தார். 

மேற்படி ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகி 3 மாதங்கள் கடந்த நிலையல், ஈரானிய ஒழுக்கநெறி பொலிஸ் படை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானிய ஒழுக்க நெறி பொலிஸ் அதிகாரிகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன அண்மையில் தடை    விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து தீப்பிடித்ததில் 41 பேர் பலி – பாகிஸ்தானில் சம்பவம்

videodeepam

சகோதரர் வில்லியம் தம்மை தாக்கியதாக இளவரசர் ஹரி குற்றச்சாட்டு

videodeepam

காஸா பகுதியில் ஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதல்-  ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்!

videodeepam