ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான முதலாவது பேச்சு, ஜனாதிபதி செயலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5.30க்கு நடைபெறவுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில், ஜனாதிபதியால் ஏற்கெனவே, விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு அமையவே முதலாவது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிதிகள் பங்கேற்கவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய இனப்பிரச்சினைக்கு நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வுகாணும் வகையில், பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டுமென 2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் மீதான உரையின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அழைப்பொன்றை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.