deepamnews
இலங்கை

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று கைச்சாத்திட்டு சான்றுப்படுத்தினார்.

கடந்த 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

புதிய திருத்தங்களின் மூலம் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா வருமானம் பெறுவோர் வரியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், ஒரு இலட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுவோர் 06 முதல் 36 வீதம் வரை 06 பிரிவுகளில் வரி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மாதமொன்றில் 350,000 ரூபா வருமானம் பெறும் ஒருவர், குறித்த 06 பிரிவுகளுக்கும் பொருந்தும் வகையில் மாதாந்தம் 52,500 ரூபாவை வரியாக செலுத்த வேண்டும்.

Related posts

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழு அசமந்தம்.

videodeepam

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன் இணைந்த கோட்டாபய ராஜபக்ச  –  முக்கிய தகவல் கசிந்தது !

videodeepam

எகிப்துக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

videodeepam