deepamnews
இலங்கை

கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணியை அம்பேவல பண்ணைக்கு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

அம்பேவல பண்ணையை அண்மித்துள்ள, கைவிடப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவல பண்ணைக்கு வழங்கி, அதனை மேம்படுத்த தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

இந்த காணி மேய்ச்சல் நிலமாக பராமரிக்கப்பட்டு, கறவை மாடுகளின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான கட்டமைப்புடன் இணைக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

அம்பேவல பண்ணைக்கு சொந்தமான United Dairies Lanka (Pvt.) Ltd-இன் புதிய பிரிவிற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

பல்கலைக்கழக மாணவர்களின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அனுபவத்திற்காக இந்த பண்ணையை திறந்து வைத்து, அதற்குத் தேவையான பின்புலத்தை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related posts

யாழ் .உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு

videodeepam

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் –  மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

videodeepam

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள முக்கிய கூட்டம்!

videodeepam