deepamnews
இலங்கை

யாழ் .உடுத்துறையில் சுனாமி நினைவேந்தல் அனுஷ்டிப்பு

சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18வது ஆண்டு நினைவு நாடெங்கிலும் இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்று வருகின்றது.

அந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) யாழ். வடமராட்சி உடுத்துறையில் உள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் உறவுகளால் நினைவு அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு , தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு.

videodeepam

நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளில் நம்பிக்கையில்லை என்கிறது ஐக்கிய மக்கள் சக்தி.

videodeepam

பொலிஸார் செயற்படவில்லை  என்றால் யாரிடம் கேட்பது –  சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி.

videodeepam