deepamnews
இலங்கை

தென் மாகாணத்தில் குற்றங்களை தடுக்க ஆயுதம் தரித்த 69 குழுக்கள் – அஜித் ரோஹன தகவல்

பாதாள உலக குழுக்களினால் முன்னெடுக்கப்படும் குற்றங்கள் உள்ளிட்ட பாரிய குற்றங்களை தடுப்பதற்காக  தென் மாகாணம் முழுதும் ஆயுதம் தரித்த 69 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அதன்படி இவ்வாண்டு இதுவரை தென் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அச்சம்பவங்கள் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தனித்தனியாக குற்றத் தடுப்பு பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பிரிவுகள் ஊடாக குற்றங்களை தடுக்க விஷேட விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந் நிலையில் இறுதியாக தென் மாகாணத்தில் கடந்த 23ஆம் திகதி எல்பிட்டிய – யக்கடுவ பகுதியில் 26 வயது இளைஞன் ஒருவன் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டிருந்தது. அச்சம்பவம் தொடர்பில் காலி குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணைகளை முனென்டுப்பதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்  மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

Related posts

மைத்திரிபால சிறிசேனவை சிறையிலடைக்க வேண்டும் – சரத் பொன்சேக்கா கோரிக்கை

videodeepam

இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் – கச்சத்தீவில் நேற்று பேச்சுவார்த்தை  

videodeepam

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவு – வருடாந்த மாநாட்டில் தீர்மானம்

videodeepam