deepamnews
இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என்கிறார் வர்த்தக அமைச்சர்

முட்டை தவிர்ந்த ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தால் பொறுப்பை ஏற்க தயார் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சின் தலையீட்டில் ஆரம்பமான முட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உற்பத்தியை அதிகரிப்பது தனது பொறுப்பு என்றாலும், முட்டையின் விலையை கட்டுப்படுத்துவது தம்முடைய பணி அல்ல என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்ததையடுத்து, சந்தையில் முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவைத் தாண்டி பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Related posts

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் பெண்போராளிகளின் மனித எச்சங்கள் மீட்பு.

videodeepam

நாடளாவிய ரீதியில் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

videodeepam

தேர்தலுக்கு நிதியில்லை என்பது  ஜனாதிபதியின் அரசியல் சூழ்ச்சி –  அநுர குமார திஸாநாயக்க குற்றச்சாட்டு

videodeepam