deepamnews
இலங்கை

யாழில் தனியார் விடுதியில் வாள்வெட்டு – 21 வயது இளைஞன் காயம்

யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்தார்.

காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (29) இரவு 7.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத மர்மக் கும்பல் விடுதியில் நின்றவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.

காயமடைந்தவர் 21 வயதான பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

வாள்வெட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழ். போதனா வைத்தியசாலைச் சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

videodeepam

இளம் தலைமைத்துவத்தை நாம் உருவாக்குவோம்  – சந்திரிகா

videodeepam

மக்களின் வாக்குரிமையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது ஐக்கிய மக்கள் சக்தி

videodeepam