deepamnews
இலங்கை

மின் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களிடம் யோசனை கோரப்படுகிறது

இலங்கை மின்சார சபையினால் திட்டமிடப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனைகளை நேற்று முதல் எதிர்வரும் 21 நாட்களுக்குள் முன்வைக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது.

இந்த வருடத்திற்காக 66.2 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை ஆராய்ந்து அண்மையில் அமைச்சரவை யோசனை முன்வைத்திருந்தது.

அந்த கட்டண திருத்தம் தொடர்பில் பிரச்சினைகள் அல்லது எதிர்ப்புகள் இருக்குமாயின் எழுத்துமூலம் அறியப்படுத்துமாறு அந்த ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பின்னர், அந்த அறிவிப்புக்கள் ஆராயப்பட்டு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பாலஸ்தீன பிரதேசங்களில் அதிகரித்துள்ள வன்முறைகள் குறித்து இலங்கை கவலை

videodeepam

மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவத் தயார் – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு 

videodeepam

மீண்டும் அரிசி இறக்குமதிக்கான தேவை ஏற்படாது – விவசாய அமைச்சர் அறிவிப்பு

videodeepam