deepamnews
இலங்கை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அடங்க மறுத்த இலங்கை அரசியல்வாதியின் காளை

உலக புகழ்பெற்ற தமிழக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தமிழக அமைச்சர்கள், பிரமுகர்கள் மற்றும் இலங்கை அரசியல்வாதியின் காளைகள் வெற்றிபெற்றன.

இந்த போட்டியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானின் சோழன் – 2 என்ற காளை தன்னை அடக்க வந்த வீரர்களுக்கு அடங்காமல் போட்டியில் வெற்றிபெற்றது.

அதனையடுத்து தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செந்தில் தொண்டமானின் காளைக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கி வைத்தார்

தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் வீரத்தை பறைசாற்றும் வகையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள்.

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் 15-ந் திகதியும், பாலமேட்டில் 16-ந் திகதியும், அலங்காநல்லூரில் 17-ந் திகதியும் நடந்தது.

அவனியாபுரத்தில் 737, பாலமேட்டில் 860, அலங்காநல்லூரில் 825 என 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 2,422 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 1,200 வீரர்கள் பங்கேற்றனர்.

உலகப் பிரசித்தி பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் நடந்தது. காலை முதல் மாலை வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான், நடிகர் சூரி, ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் காளைகள் களத்தில் நின்று விளையாடின. அவர்களது காளைகள் அடக்க முடியாத அளவில் வீரர்களை சமாளித்து போட்டியில் வெற்றிபெற்றன.

அதுமட்டுமின்றி போட்டியில் ஏராளமான பெண்கள் வளர்த்த காளைகளும் களம் கண்டன.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிக பரிசுகள் தரமானதாகவும், விலை மதிப்புள்ளதாகவும் வழங்கப்பட்டன.

Related posts

யாழில் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு.

videodeepam

கிளிநொச்சியில் புதையல் தேடி அகல்வுபணி!

videodeepam

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவை சந்திக்க ஜனாதிபதி திட்டம்

videodeepam