deepamnews
இலங்கை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்க திட்டம்  

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் ஆளுந்தரப்பின் உறுப்பினர்கள் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.

ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கும் யோசனையை எதிர்வரும் மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்க ஆளுந்தரப்பினர் அவதானம் செலுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர் குழு கூட்டத்தில் மின்கட்டணம் அதிகரிப்பு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

அத்துடன், மின்கட்டண அதிகரிப்புக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இடமளிக்காமல் இருப்பது தொடர்பில் ஆளும் தரப்பினர் சுட்டிக்காட்யுள்ளனர்.

இந்த  நிலையில்,  தன்மை பதவி நீக்க முன்னர் மின்சாரத்துறை மற்றும் வலுசக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை பதவி நீக்கி, துறைசார் திறன் கொண்ட புத்திசாலித்தனமான ஒருவரை மின்சாரத்துறை அமைச்சராக நியமித்தால் இணக்கமாக செயற்பட முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

காணாமல்போனோருக்கு பட்ஜட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு உறவுகள் வன்மையான கண்டனம்.

videodeepam

ஏடிஎம் கார்டுகளில் பணத்தை திருடிய வாலிபர் கைது  

videodeepam

யாழ். மாநகர சபையின் தமிழரசுக்கட்சியின் சார்பான வேட்பாளர் சொலமன் சிறில்?

videodeepam