deepamnews
இலங்கை

தன்னிச்சையாக செயற்படும் அரசாங்கத்திற்கு தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுக்க முடியும் – ஜி.எல் பீரிஸ் தெரிவிப்பு

தேர்தலுக்கு நிதி இல்லை என்று குறிப்பிடும் அரசாங்கம் அமைச்சரவை அமைச்சுக்களை விரிவுப்படுத்த முயற்சிப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கணடவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தலை நடத்துவதை தவிர அரசாங்கத்திற்கு மாற்று வழியேதும் கிடையாது.மக்களாணைக்கு அஞ்சி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் மேற்கொள்ளாத முயற்சி ஏதும் கிடையாது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தும் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அறிவிக்கவில்லை.

ஆகவே ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து வேறுப்பாடு உள்ளது என அரசாங்கம் காலாவதியான புதிய தர்க்கத்தை தற்போது முன்வைக்கிறது.

நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கும்,கருத்துக்களுக்கும் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை.அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.மக்களாணை இல்லாத அரசாங்கத்திற்கு தேர்தல் ஊடாகவே மக்கள் பதிலடி கொடுக்க முடியும், அதற்காக இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

videodeepam

உள்ளூராட்சி மன்ற  தேர்தல் தாமதமடையக்கூடும்  – அரசாங்கம் அறிவிப்பு

videodeepam

தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து நாடளாவிய ரீதியில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

videodeepam