deepamnews
இலங்கை

உயர் தர பரீட்சைக் காலத்தில் மின் துண்டிப்பு – விசாரணைகளை ஆரம்பிக்கும்  மனித உரிமைகள் ஆணைக்குழு

உயர் தர பரீட்சைக் காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட ஆலோசனையை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எனவே, இன்று  காலை 10.30 மணிக்கு ஆணைக்குழுவில் நடைபெறும் விசாரணைகளில் கலந்துகொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 23 ஆம் திகதி இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்பதை தாம் கண்காணித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும், நாளையும் மின்வெட்டு மேலும் 20 நிமிடங்களால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உயர் தர பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்சார துண்டிப்பை நிறுத்துமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

இளையவர்களுக்கான பயிற்சி பாசறை

videodeepam

காணாமல் போன நெல் தொகையின் பெறுமதி 65 மில்லியன் ரூபா: நெல் சந்தைப்படுத்தல் சபை.

videodeepam

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் விகாரைகள் அமைப்பதற்கு நான் என்றும் எதிர்ப்பு – அங்கஜன் இராமநாதன்

videodeepam