deepamnews
இலங்கை

இலங்கை ஸ்திரத்தன்மையை அடைந்த பின்னரே நிலையான வளர்ச்சியை அடைய முடியும் – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

கடன் விவகாரத்தில் ஸ்திரத்தன்மையை அடைந்த பின்னரே இலங்கையால் நிலையான வளர்ச்சியை அடைய முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வர்த்தக, இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பிலான தகவல்களை வெளியிடும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனை தெரிவித்ததாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு தேவையான நிதி உத்தரவாதத்தை இந்தியா ஏற்கனவே வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவும் ஜப்பானும் விரைவில் நிதிச் சான்றிதழ்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை 6 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய முடியும் என நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மே 1 ஆம் திகதி முடங்கும்  கொழும்பு – ஜோசப் ஸ்டாலின்  மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு

videodeepam

மனோ கணேசன் எம்.பி ஊடக சந்திப்பு

videodeepam

ஏப்ரல் 5 பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

videodeepam