deepamnews
இலங்கை

இந்திய விசா விண்ணப்ப மையத்தில் கொள்ளை – மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

கொழும்பு – பம்பலப்பிட்டி, தும்முல்லையில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தினுள் திருடர்கள் நுழைந்துள்ளனர்.

அங்கிருந்த லெப்டாப் உள்ளிட்ட சில இலத்திரனியல் பொருட்கள் இதன்போது திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனால், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா விண்ணப்ப மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் ஐவிஎஸ் பிரைவெட் லிமிடெட் உடனான தங்கள் சந்திப்புகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விசா விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அவசர தூதரகம் அல்லது விசா விடயத்திற்கு உயர் ஸ்தானிகராலயத்தை 011 232 69 21 அல்லது 011 242 28 60 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Related posts

பாணின் விலை 10 ரூபாயினால் அதிகரிப்பு!

videodeepam

பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு.

videodeepam

நெடுந்தீவில் கூட்டுப்படுகொலை – சந்தேக நபர் கைது:  தொடரும் பரபரப்பு…!

videodeepam