deepamnews
இலங்கை

வட மாகாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு –  மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

வட மாகாணத்தில் உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க தலைமையிலான குழு  யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு கடந்த 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டிருந்தது.

இந்த குழுவில் மனித உரிமைககள் ஆணையாளர் அனுஷ்யா சண்முகநாதன் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் உள்ளடங்கியிருந்தனர்.

உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தல், நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள், வட மாகாண அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்ட மற்றும் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பிரதிநிதிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இதன்போது சந்தித்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆராய்வு மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

Related posts

அடுத்த வருடத்தில் பொதுத் தேர்தல் – மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி ரணில்

videodeepam

அடுத்த வருடத்திற்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30% சலுகை விலையில் வழங்க நடவடிக்கை..

videodeepam

தவத்திரு வேலன் சுவாமிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பு!

videodeepam