deepamnews
இலங்கை

தேர்தல் தொடர்பில் தீர்மானம் மிக்க விசேட கலந்துரையாடல் நாளை – தேர்தல் திகதி அறிவிக்கப்படும் சாத்தியம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது.

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் ஆணைக்குழுவிற்கு இடையில் நேற்று முன்தினம் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Zoom தொழில்நுட்பத்தினூடாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், உரிய வகையில் நிதி கிடைக்காமையினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆணைக்குழுவிடம் எடுத்துரைத்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படுகின்றமையால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரிகளால் இதன்போது ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப்பட்ட எந்தவொரு விடயத்தையும் அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை – சஜித்

videodeepam

கொரோனா தொற்று பரவல் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

videodeepam

இரு வீடுகளை தாக்கிய மின்னல் – ஒருவர் காயம்

videodeepam