deepamnews
இலங்கை

மிலிந்த் மொரகொட மற்றும் நிர்மலா சீதாராமன் இடையே விசேட சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்திய நிதி அமைச்சர் எஸ். நிர்மலா சீதாராமன் அவர்களை புதுடெல்லியில் நேற்று (21) சந்தித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கான இந்தியாவின் ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்து உயர் ஸ்தானிகர் மொரகொடா, நவம்பர் 2021 முதல் அமைச்சர் சீதாராமனுடன் தொடர்ந்து பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தினார்.

இக்கலந்துரையாடலில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீட்டிக்கப்பட்ட நிதியுதவியை இலங்கைக்கு பெறுவதற்கு இந்திய அரசாங்கம் எடுத்துள்ள தலைமைத்துவத்திற்கு இலங்கை மக்களின் நன்றியை அமைச்சர் சீதாராமனுக்கு தெரிவிக்கும் முயற்சியை மிலிந்த் மொரகொட மேற்கொண்டார்.

தற்போதைய சூழ்நிலையில் இருதரப்பு அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட பலதரப்பு நிதி நிறுவனங்களுடன் இலங்கையின் நலனை முன்னேற்றுவதற்கு நிதியமைச்சரின் தனிப்பட்ட தலையீட்டிற்கு அவர் அமைச்சர் சீதாராமனுக்கு குறிப்பாக நன்றி தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வட, கிழக்கில் தடைகளைத் தாண்டி உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்

videodeepam

இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி பணமோசடி செய்தவரை விடுவித்ததாக வவுனியா பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

videodeepam

இலங்கையில் மத சுதந்திரத்திற்கு தடை – சர்வதேச மத சுதந்திர அமெரிக்க ஆணைக்குழு தெரிவிப்பு

videodeepam