deepamnews
சர்வதேசம்

ரஷ்யாவின் முக்கிய நகரில் வெடிகுண்டு மீட்பு; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வெடிபொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனுடனான நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நகரத்தின் மீது ரஷ்ய போர் விமானம் தற்செயலாக வெடிகுண்டு வீசி விபத்தினை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விபத்து இடம்பெற்ற இரண்டு நாட்களில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதற்கும் போர் விமான சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.  

Related posts

பிரான்ஸ் பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு, (Annie Ernaux) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

videodeepam

கனடாவில் கடும் தொழிலாளர் பற்றாக்குறை -ஐந்து இலட்சம் பேரை உள்வாங்க திட்டம்

videodeepam

ரஷ்யாவின் எச்சரிக்கையினால் தடுமாறும் மேற்குலக நாடுகள் – உக்ரைனை கைவிட்ட பிரித்தானியா

videodeepam