deepamnews
இலங்கை

ஒடிசா தொடருந்து விபத்துக்கு ஜனாதிபதி ரணில் இரங்கல்

இந்தியா – ஒடிசா மாநிலத்தில் தொடருந்துகள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் மிகுந்த கவலை அடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில், துயரமான இந்த தருணத்தில் அயல் நாடு என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் மக்களும் இந்தியாவுடன் கைகோர்த்து நிற்போம் எனவும் உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேநேரம் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – நடிகை தமிதா அபேரத்ன அறிவிப்பு

videodeepam

சர்வதேச நீதிமன்றை நாடுவதில் அரசாங்கம் இரட்டை கொள்கை:  இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு

videodeepam

TikTok க்கினால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள்

videodeepam