deepamnews
இலங்கை

வடமாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் – சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் தெரிவிப்பு.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் முதநிலைச் செயலாளர் திரு ஒலிவர் பிரஸ் (OLIVIER PRAZ) தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய வந்த அவர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் 23.08.2023 அன்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.  சார்ள்ஸ் அவர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் வடமாகாண மக்களின் பொதுவான உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் வடமாகாணத்தில் தற்போது தாம் முன்னெடுத்துவரும் செயற்பாடுகள் குறித்து சுவிஸ் தூதரகத்தின் பிரதித் தலைவருக்கு ஆளுநர் விளக்கியிருந்தார்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 37,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

videodeepam

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெறும் போராட்டத்தில் பதற்றம்!

videodeepam

2023 ஆம் ஆண்டில் அரசின் மொத்த செலவினம் 7 ஆயிரத்து 885 மில்லியன் ரூபாய் என கணிப்பு

videodeepam