deepamnews
இலங்கை

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – தாதிக்கு பயணத்தடை.

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் தாதியருக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்று பயணத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.

அது தொடர்பில் சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, வடமாகாண ஆளுநர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தினர்.

அதனை தொடர்ந்து, இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து நிலையில், பெற்றோர் சார்பில் குறித்த தாதியார் வெளிநாடு தப்பி செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என மன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட மன்று தாதியருக்கு பயணத் தடை விதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

Related posts

முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

videodeepam

அனைத்து நாடுகளுடனும் நட்புறவு கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் ஜனாதிபதி ரணில்

videodeepam

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அடுத்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானம்

videodeepam