deepamnews
இலங்கை

காஸா எல்லையில் இருந்து 13 இலங்கையர்கள் எகிப்தின் ரஃபா எல்லையை அண்மித்துள்ளனர்.

காஸா எல்லையில் சிக்கியுள்ள இலங்கையர்கள் 13 பேர் எகிப்தின் ரஃபா எல்லையை அண்மித்துள்ளனர்.

அவர்களை சந்திப்பதற்காக இலங்கை தூதரக அதிகாரிகள் சிலர் அங்கு சென்றுள்ளனர் என பாலஸ்தீனத்திற்கான இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் பிரதானி பென்னட் குரே தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலின் பின்னர் இக்குழுவினர் எகிப்தின் கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

தற்போது காஸாவில் மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 4 இலங்கையர்கள் காஸாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் தங்கியுள்ளனர் எனவும் அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் பிரதானி பென்னட் குரே தெரிவித்துள்ளார்.

Related posts

மாடியில் இருந்து வீசப்பட்ட குழந்தை -தாயின் சகோதரர் கைது

videodeepam

பாடசாலைக்குள் நுழைந்து மாணவனை தாக்கிய நீதிமன்ற உத்தியோகத்தர்.

videodeepam

மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த  முடியாது – பின்னர் புதிய திகதி அறிவிக்கப்படும் என்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு

videodeepam