deepamnews
இலங்கை

இறைச்சிக்காக விலங்குகளை வேறு நாடுகளுக்கு அனுப்பும் திட்டத்திற்கு அரசாங்கம் உடன்படவில்லை – பந்துல குணவர்தன

விலங்குகளை இறைச்சிக்காக வேறு நாடுகளுக்கு அனுப்பும் எந்தவொரு திட்டத்திற்கும் அரசாங்கம் உடன்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குரங்குகளை  சீனாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்கு அனுப்புவது தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் யானைகளின் சனத்தொகை சுமார் 30 இலட்சம் எனவும், அனுராதபுரம், பொலன்னறுவை, தம்புள்ளை, கண்டி மற்றும் கதிர்காமம் ஆகிய பகுதிகளில் யானைகள் அதிகளவில் வசிப்பதாகவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் மட்டும் இலங்கையில் 28 வகையான உணவுப் பயிர்கள் வன விலங்குகளால் அழிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பதிவுகள் தெரிவிக்கின்றன என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

காய்கறிகள், நெல், வாழை, தென்னை மற்றும் மக்காச்சோளம் பயிர்கள் பூச்சிகளால் அதிகளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன், மயில்கள், காட்டுப்பன்றிகள் மற்றும் அணில்களை நாட்டுக்கு அனுப்புவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

முள்ளிவாய்க்காலில் கொல்லபட்டோருக்கு சர்வதேச விசாரணை கோருவாரா சஜித்? – சார்ள்ஸ் எம்.பி. கேள்வி.

videodeepam

நத்தார், புதுவருட பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை

videodeepam

மாலதி அவர்களின் 36 ஆவது நினைவு தின நிகழ்வுகள்.

videodeepam