deepamnews
இந்தியா

டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்ட மோடி!

பப்புவா- நியூகினியில் டோக் பிசின் மொழியில், மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

இந்தியா – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் மூன்றாவது உச்சிமாநாட்டையொட்டி இந்திய பிரதமர், நேற்று முன்தினம் பப்புவா நியூகினிக்கு சென்றடைந்தார்.

இதன்போதே, டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் இந்திய பிரதமரினால் வெளியிடப்பட்டுள்ளது.

பப்புவா- நியூகினிக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரபே, அவரது பாதங்களைத் தொட்டு, அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

முதல்முறையாக அதிமுக கொடி இல்லாத காரில் பயணித்த ஓபிஎஸ்.

videodeepam

காலாவதியான சட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு

videodeepam

இந்தூரில் கோவில் படிக்கட்டு கிணறு இடிந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு

videodeepam