deepamnews
சர்வதேசம்

சிரியா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் நால்வர் உயிரிழப்பு.

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானிய இராணுவ ஆலோசகர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சிரிய இராணுவத்தை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதுகாப்புப் படைப்பிரிவின் உறுப்பினர்கள் தங்கியிருந்த நான்கு மாடி கட்டடத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2011 இல் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியதிலிலிருந்து ஈரானின் புரட்சிகர பாதுகாவலர்களின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு சிரியாவில் உள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆட்சியை ஆதரிப்பதற்காக இந்த குழு உள்ளது.

எனினும், தலைநகர் டமாஸ்கஸில் தாக்குதல் நடத்தப்பட்ட கட்டடத்திற்கு அருகிலேயே ஐ.நா.வின் தலைமையகம், தூதரகங்கள் மற்றும் இராணுவ விமான நிலையம் என்பன அமைந்துள்ளன.

இந்த தாக்குதலையடுத்து, தலைநகர் டமாஸ்கஸின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Related posts

நோர்வே கடற்பரப்பு மீது 14 மணிநேரம் பறந்த ரஷ்ய குண்டுவீச்சு விமானம் – எழுந்துள்ள அச்சம்

videodeepam

உளவு பலூன் விவகாரம் – சீன பயணத்தை ஒத்தி வைத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

videodeepam

உக்ரைனில் குடியிருப்பு மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்- 11 பேர் பலி

videodeepam