deepamnews
இலங்கை

குழந்தை பால் மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு

குழந்தை பால் மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே பிறந்த மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளுக்கான “Pre Nan” பால்மா, தற்போது கையிருப்பில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைமாத குழந்தைகளுக்கான பால் மா தற்போது கையிருப்பில் இல்லை என்றும், தற்போது அவற்றின் விநியோகம் இடம்பெறாத நிலையில், கடுமையாக முயற்சித்தும், அவற்றைப் பெற முடியவில்லை என்றும்,  அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக கங்கந்த தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பல்பொருள் அங்காடிகளிலும், குழந்தை பால் மா தட்டுப்பாடு நிலவுவதாகவும், தற்போதுள்ள கையிருப்பு தீர்ந்த பின்னர், முற்றாக கிடைக்காமல் போகும் ஆபத்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அந்நியச் செலாவணி நெருக்கடியால் நாடு முழுவதும் இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள அதேவேளை உள்நாட்டு உற்பத்தி பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் – பொதுஜன பெரமுன அறிவிப்பு

videodeepam

அவசரமாகத் தரையிறக்கப்பட்டது ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம்.

videodeepam

நாட்டின் பல இடங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை

videodeepam