deepamnews
இலங்கை

அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

பாடசாலைகளில் தற்போது ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ள நிலையில் புதிதாக எவரையும் இணைத்துக் கொள்ளாமல் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் பொது பரீட்சையொன்றை நடத்தி, அவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையில் உள்வாங்கப்பட்ட நிலையில், பணிகளுக்கு அமர்த்தப்படாத மேலதிக ஊழியர்களை இவ்வாறு ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

26,000 ஆசிரியர்களை சேவையில் இணைக்கும் நோக்கில் பொது போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பொது அறிவு மற்றும் உளநல பரீட்சைகளின் புள்ளிகள் அடிப்படையில், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Related posts

உயர் தர பரீட்சைக் காலத்தில் மின் துண்டிப்பு – விசாரணைகளை ஆரம்பிக்கும்  மனித உரிமைகள் ஆணைக்குழு

videodeepam

2030 பயணிகளுடன் அதிசொகுசு உல்லாச கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது  

videodeepam

கொழும்பின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு.

videodeepam