deepamnews
சர்வதேசம்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – விமான சேவைகள் இரத்து

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக விமான சேவைகள் முடங்கியுள்ளன.

கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவின் நியூயார்க், பென்சில்வேனியா, நெவாடா, கொலராடோ உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால், வீடுகளும் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களும் பனிக்குள் புதைந்துள்ளன.

வீதிகளில் பல அடி மீட்டருக்கு பனி படர்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பனிப்புயல் மற்றும் விமான நிலைய ஓடுதளங்களில் ஏற்பட்டுள்ள பனியால் பல்வேறு மாகாணங்களில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 137 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அனைத்து போக்குவரத்தும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

நிதியமைச்சவைப் பதவியில் இருந்து நீக்கினார் பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ்

videodeepam

வாகனத்தை பின்தொடர்ந்து துரத்திய புகைப்படப்பிடிப்பாளர்கள் –  விபத்தில் சிக்கினார் இளவரசர் ஹரி

videodeepam

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு சிறப்பு தூதரை அனுப்பும் சீனா

videodeepam