deepamnews
இலங்கை

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் பெரும் தொற்று காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்டு போக்குவரத்து காரணமாக கடந்த இரண்டு வருடங்களிலும் மிகக் குறைந்த அளவு டெங்கு நோயாளர்களே இனங்கப்பட்டிருந்தார்கள்.

ஆனால் இந்த வருடத்தில் இன்று வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3294 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 9 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன

இந்த வருடத்தின் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது

அக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 237 நோயாளர்களும், நவம்பர் மாதத்தில் 367 நோயாளர்களும், டிசம்பர் மாதத்தில் 570 நோயாளர்களும் டெங்கு நோயுடன் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக கடந்த இரண்டு வார கால பகுதியிலே சடுதியான அதிகரிப்பை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

கடந்த பல வருடங்களிலே சில வருடங்களில் டெங்கு நோய்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் இறப்புக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.

ஆனால் இந்த வருடத்தில் இதுவரை 9 இறப்புகள் காணப்படுவது மிக கூடிய ஒரு அதிகரிப்பதாக காணப்படுகின்றது.

Related posts

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் அரிசியின் விலை

videodeepam

USAID நிறுவன நிதி அனுசரணையில் திருகோணமலை, மூதூர் பிரதேச மக்களுக்கு சிரமதான உபகரணங்கள் வழங்கிவைப்பு.

videodeepam

மேலும் சில பொருட்களுக்கு விலை குறைப்பது தொடர்பில் அவதானம் – நிதி இராஜாங்க அமைச்சர்

videodeepam