deepamnews
இலங்கை

2023 ஆம் ஆண்டு புதிய வருட பிறப்பு இன்று – மக்கள் வான வேடிக்கைகளுடன் வரவேற்பு

2023 ஆம் ஆண்டு புதிய வருட பிறப்பை உலக மக்கள் இன்று கொண்டாடுகின்றனர்.

இலங்கை, மற்றும் இந்தியாவில் நேற்று நள்ளிரவுக்கு பின்னர் புதிய வருடம் பிறந்தது.

இந்த புது வருடத்தை கொரோனா தொற்று பரவல் நீங்கியுள்ளதால் மக்கள் வான வேடிக்கைகளுடன் ஆடம்பரமாக கொண்டாடுகின்றனர்.

கிரிபட்டி உள்ளிட்ட பசுபிக் வலைய தீவுகளில் இலங்கை நேரப்படி, 3.30க்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2023 புத்தாண்டை வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் கிழக்கு திசையில் அவுஸ்திரேலியா, ஓசியானா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடாக உள்ளது.

இதற்கமைய இலங்கை நேரப்படி பிற்பகல் 4.30க்கு நியூஸிலாந்தில் நள்ளிரவு 12 மணியானதும், அந்த நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்றதுடன், கொண்டாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

கூகுள் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

videodeepam

தேர்தலை இலக்காகக் கொண்டு அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்.

videodeepam

மக்கள் சரியான தலைமைகளை இனம் காண வேண்டும் – ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

videodeepam