deepamnews
இலங்கை

புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறிய பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்

புதிய மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கேட்டறிவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு    தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதி வரை  மக்கள் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதல் கட்டமாக மக்கள் தமது கருத்துகளை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக அறிவிக்க முடியும் என்பதோடு, அதன் பின்னர் மக்களிடம் நேரடியாக கருத்துகள் கேட்டறியப்படவுள்ளன.

கடந்த 5 ஆம் திகதி மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வேண்டுகோளை இலங்கை மின்சார சபை முன்வைத்ததாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய, ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

Related posts

கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை..! – சஜித் தெரிவிப்பு

videodeepam

கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடையும் – ஜனாதிபதி ரணில்

videodeepam

கிளிநொச்சி செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு!

videodeepam