deepamnews
இலங்கை

நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

நல்லிணக்கத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் பொருளாதார அபிவிருத்தியின் வேகம், மக்களின் மனப்பாங்கு மற்றும் அர்ப்பணிப்பிலேயே அது தங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடமாகாண பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்திற்கு முன்னர் வடமாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அந்த வலுவான பொருளாதாரத்தை வடக்கில் மீண்டும் ஏற்படுத்தத் தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்க வேலைத்திட்டத்தின் கீழ், அதிகூடிய அதிகாரத்தை பகிர்வது குறித்தும் வடக்கு பிரதேசத்தின் அரசியல் விவகாரங்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தியுடன் வட மாகாணத்திலும் பாரிய அபிவிருத்தி ஏற்பட வேண்டும் என நம்புகிறோம்.

யுத்தத்தினால் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் முற்றாக அழிந்தது.

எதிர்பார்க்கப்பட்ட நிலை இதுவரையில் எட்டப்படவில்லை.

எனவே, நாட்டை அந்த நிலைக்கு கொண்டு வருவதற்காக 10 வருடத் திட்டத்தின் கீழ் செயல்பட எதிர்பார்க்கிறோம்.

இதற்கு வெளிநாட்டு உதவிகள் மட்டுமன்றி புலம்பெயர் அமைப்புகளின் உதவிகளையும் பெற வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணி உறுதிப் பத்திரம் மற்றும் தலா 38 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலைகள் வடக்கில் இடம்பெயர்ந்த 197 குடும்பங்களுக்கு பகிரந்தளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வின் ஓர் அம்சமாக இந்த நிகழ்வு இடம்பெறுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்கும் சீனா – இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க திட்டம்

videodeepam

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam

முல்லைத்தீவில் இ.போ.ச பேருந்து சாரதி மீது தாக்குதல்.

videodeepam