deepamnews
சர்வதேசம்

துருக்கி நிலநடுக்கம் தொடர்பில் கட்டுமான ஊழல் குற்றச்சாட்டில்  184 பேர் கைது – 600 பேரிடம் விசாரணை

துருக்கியில் கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 600 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

துருக்கியில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், அதிகப்படியான உயிர் சேதத்துக்கு மோசமான கட்டுமானமே காரணம் என துருக்கியை சேர்ந்த கட்டிடவியல் நிபுணர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

அந்த நாட்டின் கட்டுமான விதிப்படி நிலநடுக்கத்தை எதிர்கொள்வதற்கான பொறியியல் தர அளவு பின்பற்றப்பட வேண்டும். இந்த விதிமுறையை உரிய வகையில் அமல்படுத்தாமல் ஊழல் செய்து கட்டுமான பணிகளே மேற்கொண்டதாலேயே ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோனதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த கட்டுமான ஊழல் குறித்து அந்த நாட்டின் நீதித்துறை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த விசாரணை தொடர்பாக இதுவரை கட்டிட ஒப்பந்ததாரர்கள், கட்டிட உரிமையாளர்கள் உள்பட 184 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக 600-க்கும் அதிகமானோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

10 தடவைகளுக்கு மேல் அமெரிக்க பலூன்கள் அத்துமீறின – சீனா குற்றச்சாட்டு

videodeepam

30 நாடுகளில் கொலரா நோய்  பரவல் – உலக சுகாதார அமைப்பு  எச்சரிக்கை

videodeepam

ஒருதலைப்பட்ச போர் நிறுத்த அறிவிப்பின் பின்னர் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக யுக்ரைன் குற்றச்சாட்டு

videodeepam