deepamnews
இந்தியா

தமிழ்நாடு விழுப்புரத்தில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – குற்றவாளிகளை கைது செய்யுமாறு கோரிக்கை

12ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை இன்று அன்றாட செய்தியாகிவிட்டது. அந்த வகையில், விழுப்புரம் அருகே செங்கமேடு பகுதியில் 12ம் வகுப்பு மாணவி, தனது சக பள்ளி மாணவனுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், மாணவனை தாக்கி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த நிகழ்வு கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

பின்னர், மாணவனை 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டிவிட்டு வெள்ளிப்பொருட்கள், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மாணவன், மாணவி இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

எனவே, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். விழுப்புரம் அருகே செங்மேட்டில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எம்.ஜி.ஆரை பின்பற்றியவர்களுக்கு திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை இருக்கிறது – தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பு

videodeepam

‘ஒன்று கூடுவோம்’ என நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்

videodeepam

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருகிறார்- பழ. நெடுமாறன மீண்டும் வலியுறுத்தல்

videodeepam