deepamnews
இலங்கை

9 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடியவர்களுக்கு விளக்கமறியல்

9 இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரைப் பவுண் தங்க நகையை திருடிய பெண் உட்பட இருவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய கும்பலால் இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளவாலை பொலிஸார் ஒரு பெண் (43) மற்றும் ஒரு ஆண் (வயது 26) ஆகியோரை கைது செய்துள்ளதுடன் ஒரு பெண் தலைமறைவாகியுள்ளார். கைதான இருவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என அறிய முடிகிறது.

இதன்போது திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிகளவு போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் யாழ்ப்பாணத்தில் மரணம்

videodeepam

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீள்கின்றது மருத்துவமனை விசாரணை.

videodeepam

கொக்குத்தொடுவாயில் நேற்றும் 4 மனித எலும்புக்கூடுகள் மீட்பு-விசேட ஸ்கானர் மூலம் பரிசோதனை

videodeepam