deepamnews
சர்வதேசம்

இம்ரான் கானை கைது செய்வதற்கான பிடியாணை நிறுத்திவைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்வதற்கான பிடியாணையை எதிர்வரும் 13ஆம் திகதி வரை நிறுத்திவைக்கும்படி அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக பதவியில் இருந்தபோது பெறப்பட்ட பரிசுகளை, குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணைக்கு முன்னிலையாகாததால் அவரை கைது செய்ய, பிணை பெற முடியாத வகையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த பிடியாணையை நிறுத்திவைக்கும்படி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இம்ரான் கான் நீதிமன்ற உத்தரவுகளை எப்போதும் பின்பற்றுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இம்ரான் கான் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் அவரை காவல்துறையால் கைது செய்ய முடியாது என்று அவரது சட்டத்தரணி சபையில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகி பிடியாணை மீது தற்காலிக தடை பெறலாம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இம்ரான் கான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், மார்ச் 13ஆம் திகதி வரை பிடியாணையை நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டது.

Related posts

மன்னிப்புக் கோரினார்  கனடா பிரதமர் ட்ரூடோ.

videodeepam

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவொரு வர்த்தக உறவையும் தொடராது – பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு

videodeepam

அமெரிக்காவின் நிவ்யோர்க் மாகாணத்தின் வெஸ்ட்செஸ்ட்டர் பகுதியில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

videodeepam