deepamnews
இலங்கை

500 ரூபாய் வரை உயரும் பாணின் விலை

தற்போதைய நிலவரப்படி பாண் ஒன்று 500 ரூபாய் வரை உயரும் என நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் பாசிர் மொஹமட் தெரிவித்துள்ளார். கோதுமை மாவின் விலை உயர்வு, தட்டுப்பாடு, பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

நுவரெலியா மாவட்டத்தில் பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வந்த பெருந்தொகையானோர் தமது வியாபார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவிலான பேக்கரிகளை நடத்தி வந்தவர்களில் பெரும்பாலானோர் தமது தொழிலை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பேக்கரி தொழிலில் பணியாற்றிய பலரின் வேலைகள் பறிபோயுள்ளன. பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை உயர்வால், பாண் வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை. தற்போதைய நிலவரப்படி பாண் ஒன்று 500 ரூபாய் வரை உயரும்.

ஏழைகளின் உணவாக இருந்த பாண் தற்போது ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களின் உணவாக மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.

Related posts

நாட்டில் ஆங்காங்கே உருவாகியுள்ள கோஷ்டி மோதல்களை தடுக்க சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் : ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர் கலிலூர் ரஹ்மான்.

videodeepam

ஞானம் பெற்றவர் புத்தர் ; ஞானம் அற்றவர் சரத்த வீரசேகரர் – மறவன்புலோ சச்சிதானந்தம்

videodeepam

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா.

videodeepam