deepamnews
இந்தியா

இந்தியாவை உலுக்கிய கோர விபத்து! குழந்தை உட்பட 11 பேர் பலி

இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று (08) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேருந்துப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பயணிகள் பேருந்து, பாரவூர்தி ஒன்றுடன் மோதிய நிலையில் பேருந்து தீப்பற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பேரூந்தில் இருந்து பயணிகளை வெளியேற்றுவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண மானவர்களில் ஒரு அகவை குழந்தையும் அடங்கியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 32 பேர் வரை காயமடைந்து உள்ளதாகவும் இதில் சிலரின் நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றில் மேன்முறையீடு

videodeepam

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் தொன் லித்தியம் உலோகப் படிமம் கண்டுபிடிப்பு

videodeepam

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அழகிரி வலியுறுத்தல்.

videodeepam